2வது ஊசியை எடுங்கள்- அது ஐஸ்கிரீம் சாப்பிடுவது போல தான் – ஆனால் அனைவரும் பயத்தில் உள்ளார்கள்

ஆஸ்ரா செனிக்கா ஏற்கனவே எடுத்துக் கொண்ட மக்கள், 2ம் ஊசி போட முன்வரவில்லை. இதனால் பல இடங்களில் அழைப்பு விடுத்தும் பிரித்தானிய மக்கள் பின்னடிப்பு செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இதற்க்கு ஆஸ்ரா செனிக்க போட்டு 25 பேருக்கு ஏற்பட்ட ரத்தக் கட்டிகள் தான் காரணம். பின்னர் 22 பேருக்கு ரத்தக் கட்டிகள் ஏற்பட்டதாக கூறினார்கள். ஆனால் சற்று முன்னர் வெளியான அறிக்கையின் படி மொத்தம் 79 பேருக்கு ரத்தக் கட்டிகள் உருவாகியுள்ளது… இதனால்…

பிரித்தானிய மக்கள் ஆடிப்போயுள்ளார்கள். கொரோனா ஆரம்பித்த காலத்தில் இருந்தே மெல்ல மெல்ல வாழைப்பழத்தில் ஊரி ஏற்றுவது போல தான் பிரித்தானிய அரசு அறிவித்தல்களை வெளியிட்டு வருகிறது. பலர் இறந்தால் கூட கொஞ்சம் கொஞ்சமாக தான் வெளி விட்டார்கள். அது போல ரத்தக் கட்டி ஏற்பட்ட நபர்களின் தொகையைக் கூட மெல்ல மெல்ல கூறி, இறுதியில் 79 பேர் என்று கொண்டு வந்து முடித்துள்ளார்கள்.

இந்த 79 என்ற எண்ணிக்கை இவர்கள் சொல்வதை விட அதிகமாக இருக்க கூடும் என்று மக்கள் அஞ்சுகிறார்கள். இன் நிலையில் சாவகாசமாக ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டு , பொறிஸ் ஜோன்சன் ஒரு பிரச்சனையும் வராது. 2வது ஊசியை போடுங்கள் என்று குறியுள்ளார்.

Contact Us