புதிய டெக்னிக் மூலம் விவேக்

 

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி சரவணன் அருள் ஹீரோவாக நடித்து வரும் படம் தான் த லெஜண்ட். இது தற்காலிகமாக வைக்கப்பட்ட பெயர் தான். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடலா என்பவர் நடித்து வருகிறார்.

மேலும் அஜித்தின் உல்லாசம் படத்தை இயக்கிய ஜேடி-ஜெர்ரி என்ற இரட்டையர்கள் என்ற படத்தை இயக்கி வருகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

முன்னதாக இந்த படத்தில் அண்ணாச்சியுடன் படம் முழுக்க வரும் கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் மறைந்த நடிகர் விவேக். 70 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் அவர் மரணமடைந்தது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தற்போது மீண்டும் அவரது காட்சிகளை நீக்கிவிட்டு ஆரம்பத்திலிருந்து எடுத்தால் படப்பிடிப்பு செலவு இரட்டிப்பாகி விடும் என்பதை உணர்ந்த படக்குழு தற்போது அதிநவீன தொழில்நுட்பம் ஒன்றை வைத்து விவேக்கின் உருவத்தை மறு உருவம் செய்ய உள்ளார்களாம்.

அதாவது விவேக் போல் நடிக்கும் நடிகரை வைத்து மீதமுள்ள காட்சிகளை எடுத்து அதை தொழில்நுட்ப உதவியுடன் மாற்றி படத்தில் சேர்க்க உள்ளார்களாம். மேலும் விவேக் சம்பந்தப்பட்ட காட்சிகளை குறைக்கவும் முடிவு செய்துள்ளார்களாம்.

இது இப்போது மட்டுமல்ல, ஏற்கனவே பத்ரகாளி என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த நடிகை ராணி சம்யுக்தா விமான விபத்தில் இறந்ததை தொடர்ந்து இந்த டெக்னாலஜியை பயன்படுத்தி அந்த படத்தை உருவாக்கி வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us