சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற சிறுமி.. பயங்கர விபத்தில் சிக்கி பலியான பரிதாபம்..!!

 

கனடாவிலுள்ள Grande Prairie என்ற நகரின் அருகில் 14 வயதுடைய சிறுமி மாலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் எதிர்பாராமல் நடந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சிறுமி பரிதாபமாக பலியானார். இந்த விபத்தில் வேறு எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரியவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறையினர் தெரிவித்துள்ளதாவது, விபத்தில் சிக்கிய சிறுமியின் பெயர் வெளியிடப்படாது. ஏனெனில் அவர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார் என்று கூறியுள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Contact Us