லண்டனில் உள்ள ரீஜென்ட் தெருவில் 20 மற்றும் 30 வயதுள்ள இரண்டு பெண்களை

 

லண்டனில் உள்ள ரீஜென்ட் தெருவில் 20 மற்றும் 30 வயதுள்ள இரண்டு பெண்களை மர்ம நபர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11.54 மணியளவில் சுத்தியலால் தாக்கி உள்ளார். இதனைப்பற்றி தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

இந்நிலையில் முதல் தாக்குதலுக்குப் பிறகு, அந்த நபர் கிளாஸ்ஹவுஸ் தெருவுக்குள் ஓடி ஒரு மதுக்கடைக்குள் நுழைந்து, அங்கிருந்த 40 வயதுள்ள ஒரு பெண்ணையும், 50 வயதில் இருக்கும் ஒரு ஆணையும் தனது சுத்தியலால் தாக்கியுள்ளார். இதன் பின்னர் அங்கிருந்த பவுன்சர் அவரை தடுத்து நிறுத்தி காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.

இதனையடுத்து சுத்தியலால் தாக்கிய நபர் 38 வயதான ஆண் என்பதைத் தவிர, வேறு எந்த தகவலையும் காவல்துறையினர் இன்னும் வெளியிடவில்லை. இதற்கு பிறகு மத்திய லண்டனில் உள்ள சிறையில் அந்த நபர் அடைக்கப்பட்டுள்ளார்.

Contact Us