மகளைக் கொன்ற தந்தை…. அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்…. விசாரணை மேற்கொள்ளும் போலீசார்….!!

 

சுவிட்சர்லாந்து மாகாணத்திலுள்ள St. Gallen என்னும் பகுதியில் 54 வயதுடைய ஒரு ஆண் தனது மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் தனது இரண்டாவது மகளை கொன்று விட்டு தானும் இறந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். அங்கு சடலமாக கிடந்த தந்தை மற்றும் மகளை அவர்கள் மீட்டுள்ளனர். அதிலும் இந்த சம்பவம் நடந்தபொழுது அவரின் மனைவியும் மூத்த மகளும் வீட்டில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. ஆனால் இச்சம்பவம் குறித்து அறிந்த அவர்கள் இருவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இதனால் மனநல மருத்துவர்கள் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தம்பதிகள் அங்கு 10 ஆண்டுகள் வாழ்ந்து வருவதாகவும் மகிழ்ச்சியாகவே இருந்ததாகவும் அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர். இச்சம்பவம் அக்கம்பக்கத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் எந்தவொரு ஆயுதங்களும் பயன்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

Contact Us