“பெற்றோரை கட்டி வைத்து ,அவரின் மகளை வயலில் வைத்து ..”ஐந்து பேரால் நடந்த கொடுமை

 

ராஜஸ்தான் மாநிலத்தில் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெண்களுக்கு எதிரான குற்றம் மற்றும் கற்பழிப்பு சம்பவங்கள் பற்றிய செய்திகள் அதிகமாக வருகின்றன. அந்த வரிசையில் மற்றொரு பயங்கரமான சம்பவம் பரத்பூரில் அரங்கேறியுள்ளது. இங்குள்ள பரத் பூர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில், 16 வயதான மைனர் பெண் தன்னுடைய பெற்றோர் மற்றும் சகோதரனுடன் வசித்து வந்தார்

அந்த பெண்ணை கடந்த அக்டோபர் 17ம் தேதி இரவு அதே ஊரை சேர்ந்த ஒரு வாலிபர் கூட்டம் பலாத்காரம் செய்ய திட்டமிட்டனர் .அதனால் அந்த ஐந்து பேரும் அந்த வீட்டினுள் நுழைந்து ,முதலில் அந்த வீட்டிலிருந்த அந்த பெண்னின் தந்தை மற்றும் சகோதரன் இருவரையும் அடித்து உதைத்து ஒரு தூணில் கட்டி வைத்தனர் .அதன் பிறகு அந்த பெண்ணை அவர்கள் ஐவரும் பலாத்காரம் செய்து விட்டனர் .பிறகு அந்த பெண்ணின் வயலுக்கு தீ வைத்து கொளுத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர் .இது பற்றி அந்த ஊர் மக்கள் போலீசில் புகாரளித்தனர் .போலீசார் வழக்கு பதிந்து அந்த பெண்ணை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு சமூக சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்..பிறகு அந்தக் குற்றவாளிகளை கைது செய்ய வலை வீசி தேடி வருகின்றனர்

Contact Us