உக்ரைன் போரில் பிரிட்டிஷ் தயாரிப்பு நீண்டதூர ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் ரஷ்ய இலக்குகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரிட்டன் நேரடியாகப் போரில் விளையாடுவதாகச் சாடியுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரிட்டனைப் பழிவாங்குவதற்குப் பல ஆபத்தான வழிகளைத் தயார் செய்து வருவதாகச் சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பிரிட்டிஷ் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தலைமையிலான அரசு, உக்ரைனுக்கு £100 மில்லியன் அளவிலான புதிய வான் பாதுகாப்பு உதவிகளையும், நீண்டதூர ஏவுகணைகளைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்ப வரைபடங்களையும் வழங்கி வருகிறது. இதனால் ஆத்திரமடைந்துள்ள கிரெம்ளின் மாளிகை, “பிரிட்டன் நெருப்போடு விளையாடுகிறது” என்றும், லண்டன் இதற்கு மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டிவரும் என்றும் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேரடி ராணுவ மோதலில் ஈடுபட்டால் நேட்டோ அமைப்பின் நேரடித் தாக்குதலைச் சந்திக்க நேரிடும் என்பதால், புடின் ‘ஹைப்ரிட் போர்’ (Hybrid Warfare) முறைகளை பிரிட்டனுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அடியில் அமைந்துள்ள பிரிட்டனின் முக்கியக் கடல்சார் இணைய கேபிள்கள் மற்றும் ஆற்றல் குழாய்களைத் துண்டித்தல், பிரிட்டனின் நிதித்துறை மற்றும் வங்கி அமைப்புகள் மீது பேரழிவை ஏற்படுத்தும் சைபர் தாக்குதல்களை நடத்துதல் ஆகியவை புடினின் முக்கியத் திட்டங்களாகக் கணிப்பீட செய்யப்பட்டுள்ளன.
மேலும், பிரிட்டனின் முக்கிய உள்கட்டமைப்புகள் மீது நாசவேலைகள் (Sabotage) செய்ய ரஷ்ய உளவு அமைப்புகளைப் பயன்படுத்துவது மற்றும் பிரிட்டனுக்கு எதிரான கிளர்ச்சி அமைப்புகளுக்கு ரகசிய ஆயுதங்களை வழங்குவது போன்ற நடவடிக்கைகளிலும் ரஷ்யா இறங்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் இத்தகைய மிரட்டல்களுக்குப் பணியப்போவதில்லை என்றும், உக்ரைனுக்கு 100% தொடர்ந்து ஆதரவளிப்போம் என்றும் பிரிட்டிஷ் பிரதமர் உறுதியளித்துள்ளதால் லண்டன் – மாஸ்கோ இடையேயான பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.