Posted in

கோட்டையில் இருக்கும் ஒட்டுக்கேட்கும்(SPY) சாதனங்களை அகற்றும் விஜய்: அதிரடி நடவடிக்கை!

தமிழக முதல்வராகப் பதவியேற்று தற்போது கோட்டையில் இருக்கும் விஜய் அவர்களின் சிறப்புக் கட்டளையின் பெயரில், அமைச்சர்கள் அறைகளிலிருந்து அனைத்து எலக்ட்ரானிக் உபகரணங்களும் அகற்றப்பட்டு வருகின்றன. அதில் ஒட்டுக்கேட்கும்(SPY) சாதனங்களை திமுக வைத்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இதேபோல, முதலமைச்சர் அறையில் இருந்த கம்ப்யூட்டர் தொடங்கி, லேப்டாப் மற்றும் பிரிண்டர்கள் என அனைத்தையும் அதிகாரிகள் அகற்றியுள்ளனர். 

விஜய் மிகவும் உஷாராகச் செயல்பட ஆரம்பித்துள்ளார்; தற்போது அவர் தற்காலிக சபாநாயகரை நியமித்துள்ளார். அவர் இன்று மாலை ஆளுநர் மாளிகை சென்று தற்காலிக சபாநாயகராகப் பதவியேற்பார். அதனைத் தொடர்ந்து நாளை சட்டசபையில் விஜய் அவர்கள் உட்பட மீதமுள்ள 233 உறுப்பினர்களும் பதவியேற்பார்கள். அதன் பின்னர் புதன்கிழமைக்கு முன்னதாக, விஜய் அவர்கள் தனது 118 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக இருக்கிறார்கள் என்பதனை நிரூபிக்க வேண்டும்.

ஆனால் அதற்கு முன்னதாகவே, 500 யூனிட்டுக்குக் குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் எளிமையான குடும்பத்திற்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற கையெழுத்தை விஜய் நேரு விளையாட்டு அரங்கில் வைத்தே போட்டார். அத்தோடு பெண்கள் பாதுகாப்புச் சிறப்புப் படை மற்றும் போதைப்பொருள் தடுப்புச் சிறப்புப் படை என 3 முக்கிய விஷயங்களை உடனே செயல்படுத்தக் கையெழுத்துப் போட்டார்.

மேலும், தற்போது சென்னையில் இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியைச் சத்தியமூர்த்தி பவனில் சந்திக்க உள்ளார். பதவியேற்பு நிகழ்வில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் தொல். திருமாவளவன் அவர்கள் விஜய்க்கு ஆதரவு என்று அறிவித்தாலும், அவர் அதனை முழுமனதோடு செய்தாரா என்ற சந்தேகம் நிலவுகிறது. அவர் தொடர்ச்சியாக விஜயைச் சந்திப்பதைத் தவிர்த்தும் வருகிறார். இனி விஜய்யின் அதிரடி ஆட்சி தொடரவுள்ளது.