Thug Life ஷூட்டிங்கில் சிம்பு… தீயாய் பரவும் புகைப்படம்!

Thug Life ஷூட்டிங்கில் சிம்பு… தீயாய் பரவும் புகைப்படம்!

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார். வித்யாசமான கதைகளத்தில் உருவாகும் இப்படத்தில் மிரட்டலான தோற்றத்தில் கமல்ஹாசன் நடித்த வருகிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகிய அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்தினம் கமல்ஹாசன் கூட்டணி இந்த படத்தின் மூலமாக இணைந்திருக்கிறது. கமல்ஹாசனுக்கு ஜோடியாக அபிராமி நடிக்கிறார். இவர்களுடன் திரிஷா சிம்பு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது சிம்பு சூட்டிங் ஸ்பாட்டில் கமல்ஹாசன் மற்றும் அபிராமியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகிய தீயாய் பரவி வருகிறது. இதில் வயதான கமல் மற்றும் அபிராமி கணவன் மனைவியாக நடிப்பது போன்று அவரின் மகனாக சிம்பு இருப்பது போன்றும் இந்த போஸ்டரில் வெளிவந்துள்ள புகைப்படம் நமக்கு சித்தரிக்கிறது. இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வைரல் ஆகி வருகிறது. இதன் மூலம் சிம்பு தக் லைப் திரைப்படத்தில். நடித்து வருவது உறுதி ஆகிவிட்டது.