10 கிராம் 800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நீதிமன்ற ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் புதுக்கடை நீதிமன்ற எண் 03 இல் கடமையாற்றும் கஹவத்த பகுதியைச் சேர்ந்த "ஆராச்சி" என்ற நபர் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் இந்த ஐஸ் போதைப்பொருளை கஹவத்த பகுதியில் விற்பனை செய்து வருவது தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் தற்காலிகமாக தங்கியிருந்த வெல்லம்பிட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று(16) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
Tags
world news
