சவுதி இளவரசர் சல்மான் ஜமாலை கொலை செய்ய நேரடியாக உத்தரவிட்டார்- அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவிப்பு !

சவுதி அரேபியாவோடு மிக நெருங்கிய தொடர்பில் உள்ள நட்ப்பு நாடான, அமெரிக்கா சற்று முன்னர் வெளியிட்ட தகவல் பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. துருக்கியில் இஸ்தன் புல்லில் உள்ள சவுதி நாட்டு தூதுவராலயத்தில் வைத்து, ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்டார். தனது பாஸ்போட்டை புதுப்பிக்கச் சென்ற அவரை, உள்ளே அழைத்துச் சென்று அடித்துக் கொலை செய்தது மட்டும் இல்லாமல். அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி ஒரு வெள்ளை வேனில் ஏற்றி சவுதி தூதுவராலயத்திற்கு வெளியே கொண்டு சென்று எங்கேயோ புதைத்தும் விட்டார்கள்.

சவுதி நாட்டு ஊடகவியலாளரான ஜமால், சவுதி அரேபியா தொடர்பாகவும் அதன் மன்னர் தொடர்பாகவும் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வந்தார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட நிலையில் அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்று துருக்கியில் வசித்து வந்தார். இன் நிலையில் தான் அவர் கடந்த 2018 அக்டோபர் மாதம் 2ம் திகதி கொலை செய்யப்பட்டார். பல்வேறு ஆதாரங்களை திரட்டிய அமெரிக்க உளவுத்துறை. அதனை தற்போது அமெரிக்க அரசிடம் கையளித்துள்ள நிலையில். Source CNN: U.S. government says Saudi Crown Prince Mohammed bin Salman DID ‘approve’ brutal killing of journalist Jamal Khashoggi, declassified intelligence report reveals – but does NOT sanction him or ban him from visiting America.

சற்று முன்னர் அமெரிக்க அரசு உத்தியோகபூர்வமாக ஒரு அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அதில் ஊடகவியலாளரை கொலை செய்ய சவுதி அரேபிய இளவரசர் மெகமெட் பின் சல்மான் தான் நேரடியாக உத்தரவு பிறப்பித்தார் என்று அதில் மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளது.