70 மில்லியன் டாலர் ஓவியத்தை வாங்கிய சிங்கப்பூர் தமிழன்: உலகையே அலறவைத்துள்ளார் தெரியுமா ?

அமெரிக்காவைச் சேர்ந்த வரைகலைஞர் மைக் விங்கெல்மேனின் (பீப்பிள்) டிஜிட்டல் ஓவியம் ஒன்று கடந்த வியாழக்கிழமை அன்று 70 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது. ஓவியத்தை ஏலம் எடுத்தவர் மெட்டாகோவன் என்றும் அவர் சிங்கப்பூரில் வசித்து வரும் தமிழர் என்றும் தெரிய வந்துள்ளது. இவர் மெட்டாபர்ஸ் என்ற கிரிப்டோ கரன்ஸி தொடர்புடைய முதலீட்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

பிட் காயினுக்கு நிகரான கிரிப்டோ கரன்சி ஒன்றை இவரது கம்பெனி அறிமுகப்படுத்தி உள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் சொல்லப் போனால் அவர் பெரும் முதலீட்டை பிட் காயினில் விட்டு, மில்லியன் அல்ல பில்லியன் கணக்கான டாலரை சம்பாதித்து விட்டார். வெறும் புகைப்படங்களை டியிடலில் பதிவிட்ட ஒரு ஓவியம் தான் இந்த பீப்பிள் ஓவியம். இதற்கு 70 மில்லியன் அமெரிக்க டாலரை செலவு செய்தாரா ? இந்த தமிழர் யார் என்று உலகமே அவரை திரும்பிப் பார்கிறது.

அவரது முழுப் பெயர் கூட இதுவரை வெளியாகவில்லை. அப்படி பெயர் தெரியாத ஒரு பெரும் செல்வந்தராக மெட்டாகோவன் உள்ளார் என்பது தமிழர்களுக்கு எல்லாம் பெருமையான விடையம். உலகமே இவர் யார் என்று தற்போது தேடிப் பார்த்துக் கொண்டு இருக்கிறது.