லண்டனில் இலங்கை பிரச்சனையால் பாராளுமன்றம் அதிர்ந்தது: பல MPக்கள் கடும் முழக்கம் !

லண்டனில் பாராளுமன்றத்தில் சற்று முன்னர் நடைபெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசியுள்ளார்கள். ராணுவ தளபதியாக இருந்த ஷர்வேந்திர சில்வாவுக்கும், பாதுகாப்பு செயலாளர் கமல் குணவர்த்தனவுக்கும் பிரித்தானியா பயணத் தடைகளை விதிக்க வேண்டும் என்று பல MPக்கள் கோரிக்கை விடுத்துள்ள அதேவேளை. 22ம் திகதி ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை கவுன்சில் மாநாட்டில், இலங்கைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரித்தானிய வெளியுறவு அமைச்சருக்கு கூட்டாக கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்கள் MPக்கள்.

இந்த பாராளுமன்ற விவாதத்தை உறுப்பினர் சிபோன் மக்டொனா ஆரம்பித்தார். அவரை தொடர்ந்து பல உறுப்பினர்கள் பேசியவேளை, முஸ்லீம்கள் தொடர்பான பிரச்சனைகளும் விரிவாக அலசி ஆராயப்பட்டதோடு. தமிழ் மக்கள் இன்றுவரை நீதி கிடைக்காமல் வாழ்ந்து வருவதும். இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டது.

அது போக, இலங்கையில் ராஜபக்ஷர்கள் ஆட்சி நிலவி வருவதனால் அங்கே மனித உரிமை மீறல் தொடந்து வருவதாகவும். இலங்கை அரசுக்கு பிரித்தானியா கொடுக்கும் GSP + சலுகையை நிறுத்தப்பட வேண்டும், இலங்கைக்கு ஸ்காட்லன் யாட் பொலிசார் கொடுத்து வரும் பயிற்ச்சிகளை உடனே நிறுத்த வேண்டும் என்ற கடுமையான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை அம்பிகையின் உண்ணாவிரத போராட்டம் தொடர்பாகவும் பிரித்தானிய பாராளுமன்றில் தெரிவிக்கப்பட்டது,. அதுவும் கவனத்தில் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு வீடியோவையும் அதிர்வின் வாசகர்கள் இங்கே பார்கலாம்.