இலங்கை அரசுக்கு எதிராக ஒன்றினையும் வெளிநாட்டு தமிழ் அமைப்புகள் – போராட்டம் ரெடி !

இலங்கை அரசு சுமார் 300 தமிழர்களையும் பல வெளிநாட்டு தமிழ் அமைப்புகளையும் தடைசெய்துள்ளது. இன் நிலையில் வெளிநாடுகளில் உள்ள பல தமிழ் அமைப்புகள் ஒன்றாக இணைந்து இலங்கைக்கு எதிராக பெரும் போராட்டங்களை முன்னெடுக்க ஆயத்தம் செய்து வருவதாக அறியப்படுகிறது. பிரித்தானியா, சுவிஸ், கனடா , போன்ற பல நாடுகளில் உள்ள அமைப்புகள் தற்போது ஒன்றாக இணைந்துள்ளது. இலங்கை அரசு செய்த கெட்ட வேலையிலும், தமிழர்களுக்கு ஒரு நன்மை தான் பிறந்துள்ளது. ஏன் எனில்…

இது நாள் வரை பிரிந்து நின்று பல அமைப்புகள் தனி தனியாக போராடி வந்தது. தற்போது இவை அனைத்தும் ஒன்றாக ஒரு அணியில் திரண்டு நிற்கிறார்கள் என்பது தான் சந்தோஷமான விடையம். இது இவ்வாறு இருக்க, பிரித்தானியாவில் புலிகள் தடையை எடுக்கக் கோரி MPக்களுக்கு மின்னஞ்சல் நடத்தும் திட்டம் ஆரம்பமாகியுள்ளது. எனவே தமிழர்களே கீழ் காணும் முகவரியில் சென்று, உங்கள் போஸ் கோட்டை போடுங்கள், உங்கள் தொகுதி MP யார் என்று அது காட்டும். அதில் உங்கள் பெயர் மற்றும் சில விபரங்களை கொடுத்தால் போதும்.

அது தேவையான மின்னஞ்சலை தானே அனுப்பி வைக்கும். இந்த வரலாற்று கடமையை செய்ய மறக்கவேண்டாம் தமிழர்களே. புலிகள் தடை நீங்கினால் தான் தமிழர்கள் சுதந்திரமாக எதனையும் செய்ய முடியும். இதோ அந்த முகவரி. https://www.lifttheban.uk/