ஒரு வழியாக மீண்டும் இணைந்த சகோதரர்கள்- அம்மா டயானாவின் உருவச் சிலை திறக்கப்பட்டது !

பிரித்தானிய அரச குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற, இளவரசர் ஹரி அமெரிக்காவில் மனைவியோடு வசித்து வரும் நிலையில். தனது மனைவிக்கும் தனக்கு நடந்த கொடுமைகள் பற்றி அவர் TV நிகழ்ச்சியில் பேசி, பெரும் பரபரப்பை உருவாக்கியவர் ஹரி. இன்று(01) அவரும் அவரது அண்ணாவும் இணைந்து அம்மா டாயானாவின் உருவச் சிலையை திறந்து வைத்துள்ளார்கள். மேலும் சொல்லப் போனால் விட்டுப் போன உறவை மீண்டும் புதுப்பிக்கவும். மனக் கசப்புகளை பேசித் தீர்க்கவும் அவர்கள் இருவருக்கு ஒரு நல்ல சந்தர்பம் அமைந்துள்ளது. அம்மாவின் அன்பு என்பது மிகவும் புனிதமான ஒன்று. அவர் தனது பிள்ளைகள் பிரிந்திருப்பதை ஒரு போதும் விரும்ப மாட்டார். இன் நிலையில்…  (வீடியோ கீழே உள்ளது)

இறந்த இளவரசி டயானாவின் உருவச் சிலையை சற்று முன்னர் அவரது மகனான ஹரி மற்றும் வில்லியம் ஆகியோர் திறந்து வைத்தார்கள். அதன் பின்னர் அவர்கள் டயானாவின் உறவினர்களை , அதிலும் குறிப்பாக டயானாவின் அக்கா மற்றும் அண்ணாவை சந்தித்து உரையாடி உள்ளார்கள். இன்று மாலை அண்ணாவும் தம்பியும் தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். யாருடைய பிரசன்னமும் இல்லாமல் தனியாக சந்திப்பதால் அவர்கள் மனம் விட்டுப் பேசி, ஒரு முடிவுக்கு வருவார்கள் என்று பலர் எதிர்பார்கிறார்கள். அது நடந்தால் நல்லது.

Contact Us