மைத்திரிபால சிறிசேன வீட்டில் முக்கிய கூட்டம்; அப்பம் சாப்பிட்டால் ராஜபக்ஸ குடும்ப ஆட்சி கவிழும்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை (08) நடைபெறவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து இதன் போது கலந்துரையாடப் படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று மாலை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ள விடயங்கள் குறித்து இதன்போது ஆழமாக பேசப்பட்டுள்ளது.

Contact Us