ஆப்கானிஸ்தானின் முக்கிய பகுதியை கைப்பற்றிய பாகிஸ்தான்.. புகைப்பட ஆதாரம் வெளியானது..!!

 

ஆப்கானிஸ்தானிலிருந்து இன்றுடன் பிற நாட்டு படைகள் அனைத்தும் வெளியேறிவிட்டது. எனவே, தலிபான்கள் வெற்றியை கொண்டாடும் விதமாக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இதற்கிடையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் helmand மாகாணத்தில் இருக்கும் Bahramcha என்ற பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டிற்குள், 50 கிலோ மீட்டர் தூரத்தில் Bahramcha என்ற பகுதியில் இருக்கும் பளிங்குக்கல் சுரங்கத்திற்கு அருகில் பாகிஸ்தான் சோதனை சாவடி அமைத்திருக்கிறது. அந்தப்பகுதியை தான் பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கிறது. இது மட்டுமல்லாமல், பாகிஸ்தானிற்கு, அந்தப் பகுதியிலிருந்து பளிங்கு கற்களை லாரியில் கடத்தி செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Bahramcha என்ற பகுதியிலிருந்து பளிங்கு கற்களை லாரியில் எடுத்து சென்ற புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.

Contact Us