பல குஜராத்தி பணக்காரர்களிடம் பணத்தை கறந்த பொறிஸ் ஜோன்சன்: விசாரணை நடக்கவும் வாய்ப்பு உள்ளதாம் !

பிரித்தானியாவில் ஆழும் கட்சியாக இருக்கும் கான்சர்வேட்டிவ் கட்சி, பல செல்வந்தர்களிடம் பணத்தை முறைகேடாக பெற்று வருவதாக பெரும் புகார்கள் எழுந்துள்ளது. அதிலும் இந்திய வம்சாவழி செல்வந்தர்களிடம் பொறிஸ் ஜோன்சனின் கட்சி மில்லியன் கணக்கான பவுண்டுகளை பெற்று வருகிறது. பொதுவாக செல்வந்தர்கள் பணத்தை கட்சிகளுக்கு, நன்கொடையாக கொடுப்பது வழக்கம். ஆனால் பொறிஸ் ஜோன்சன் அரசு, பணம் கொடுத்த நபர்களுக்கு பல பதவிகளையும், கெளரவ பட்டங்களையும் வழங்கி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உதாரணமாக சர் பட்டம், லோட் என்னும் பட்டங்களை அரசு வழங்கி வருகிறது. இது ஒரு குற்றச் செயலாக பார்கப்படுகிறது. எனவே ஸ்காட் லாந்து பொலிசார் .. விசாரணை நடத்த வேண்டும்..

என்ற கோரிக்கை தற்போது வலுப்பெற்று வருகிறது. லண்டனில் உள்ள பல ஜலராம் பாபா கோவில்கள் மற்றும், விஷ்ணு கோவில்களின் தர்ம கர்த்தாக்களும் பெரும் தொகைப் பணத்தை பொறிஸ் ஜோன்சன் கட்சிக்கு வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

Contact Us