விமானத்தில் பயணம் செய்யப்போகின்றவர்களின் பணம் காலி: ஒமிக்ரான் வைரஸ் போடும் ஆட்டம்!

 

பல்வேறு நாடுகளுக்கான விமான கட்டணங்களை விமான நிறுவனங்கள் அதிகரித்துள்ளன என தகவல் வெளியாகி உள்ளது.

புதிய கொரோனா வைரஸ் பிறழ்வான ஒமிக்ரான் இதுவரை 17 நாடுகளில் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பாதிப்பை எவ்வாறு கையாளுகின்றன என்பதை பொறுத்து விமான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் டெல்லியிலிருந்து கனடாவிலுள்ளபெர்ண்டோநகருக்கு குறைந்தபட்ச கட்டணம் 80ஆயிரம் ரூபாவிலிருந்து 2லட்சத்து 37ஆயிரம் ரூபாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு டெல்லியில் இருந்து லண்டனுக்கு 60,000ரூபாவாக இருந்த நிலையில் இனி ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கக் கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.எனினும் இதனைப் போலவே பல்வேறு நகரங்களுக்கு விமான கட்டணம் இரண்டு முதல் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. எந்த நாடுகளில் இந்த புதிய வகை கொரோனா பரவ தொடங்குகிறது என்பதை பொறுத்து விமான கட்டணம் உயர்த்தப்பட உள்ளது என குறிப்பிடப்படுகின்றது.

Contact Us