Posted in

லண்டன் HARROWவில் தமிழர் வீட்டில் கை வரிசை காட்டிய 3 பெண் பணியாளர்கள் !

வர வர சோம்பேறியாக மாறிவரும் மனிதர்கள். அது போக பணம் இருக்கிறது என்றால் எதனையும் செய்வார்கள் என்பது சரிதான். அந்த வகையில், சில வருடங்களாக, லண்டனில் களைகட்டி  இருப்பது eastern european பெண்களை வீட்டு கிளீனர்களாக வைத்திருப்பது.  (இதில் ஒரு பெருமை வேறு).இந்தப் பெண்கள் குறிப்பாக லித்துவேனியா, எஸ்டோனியா மற்றும் றொமேனியா நாட்டை சேர்ந்தவர்கள். 3 அல்லது 2 பேராக காரில் வரும் இவர்கள், வீட்டை சுத்தம் செய்து செல்வார்கள். இவர்களுக்கு கையில் காசு கொடுத்தால் போதும்.

“நான் அவையள தான் வைச்சு இருக்கேன்” என்று ஒரு தமிழ் குடும்பம் பேச, அதனைப் பார்த்து மற்றைய தமிழ் குடும்பமும் அவர்களை வேலைக்கு வைக்க.. இப்படியே அவர்கள் பிழைப்பு கொடி கட்டிப் பறப்பது மட்டும் அல்லாது. இவர்கள் தமது சொந்த நாட்டுக்கு திரும்பும் வேளை. அல்லது சந்தர்ப்பம் சரியாக கிடைக்கும் வேளைகளில் தமது கை வரிசையைக் காட்டுவது வழக்கம்.

வீட்டில் உள்ள நகைகளை மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருடிச் சென்று விடுவதோடு. Mission முடிந்த உடனே தமது மோபைல் தொலைபேசி இலக்கத்தையும் மாற்றிவிடுவார்கள். பொலிசாரிடம் முறைப்பாடும் செய்ய முடியாது. காரணம்,  பொலிசார்..  நீங்கள் சரியான முறையில் வேலைக்கு அமர்த்தவில்லை என்று , எங்கள் மீது வழக்கு தொடுக்கவும் வாய்ப்பு உள்ளது. . அப்படியே அறிவித்தாலும் லண்டன் பொலிசாருக்கே தண்ணி காட்டும் விதத்தில் அந்தப் பெண்கள் இருப்பார்கள்.

வேலைக்கு சேரும் போதே அவர்கள் உண்மையான பெயரைச் சொல்வது இல்லை. மாறாக போலியான ஆவணங்களை தான் காட்டி வேலைக்கு சேர்ந்திருப்பார்கள். Harrowவில் உள்ள , Rayners Lane பகுதியில் இப்படியான ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது. நகைகளை கொள்ளையடித்து விட்டு,  3 பேரும் தப்பிச் சென்றுவிட்டார்கள். தாலிக் கொடி தொடக்கம், மோதிரம் வரை பறி போய் உள்ளது. (தங்கம் விற்க்கும் விலையில்) …. எனவே தமிழர்களே தற்காலிக வீட்டு வேலை என்றாலும் சரி.. சுத்தம் செய்யும் வேலை என்றாலும் சரி, ஒருவரை வீட்டுக்குள் அனுமதிப்பது என்பது சிந்தனை செய்யவேண்டிய … விடையம்.  இதனை விட வெள்ளை இன மக்கள் சற்று அதிக பணம் சார்ஜ் செய்தாலும் நேர்மையானவர்கள் என்பது ஊர் அறிந்த விடையம். Follow செய்யுங்கள்.

Loading