ஹீரோவாகும் வனிதாவின் மகன்… இயக்குனர் பயங்கரமான ஆள் ஆச்சே!

ஹீரோவாகும் வனிதாவின் மகன்… இயக்குனர் பயங்கரமான ஆள் ஆச்சே!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக பார்க்கப்படுபவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் விஜயகுமாரின் மூத்த மகள் என்பது அனைவருக்கும் அறிந்த ஒன்று. விஜயகுமார் வீட்டுடன் சொத்து தகராறு ஏற்பட்டு பிரச்சனையால் அந்த குடும்பத்திலிருந்து பிரிந்து வந்து தனது மகள்களுடன் தனியே வாழ்ந்து வருகிறார் வனிதா விஜயகுமார்.

இதனுடைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அதை எடுத்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்தும் வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகி தற்போது இயக்குனர் பார்த்திபனுக்கு உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

அத்துடன் அவரது இந்த இயக்கத்தில் உருவாகும் டீன்ஸ் திரைப்படத்திலும் நடித்துள்ளார் ஜோவிகா. இப்படியான நேரத்தில் வனிதாவின் மூத்த மகனான விஜய் ஸ்ரீ ஹரியும் சினிமாவில் ஆரம்பம் காட்டி ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். ஆம் ஸ்ரீ ஹரி கும்கி, மைனா போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கி மாபெரும் வெற்றிக்கொடுத்த இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் தான் நடித்து வருகிறாராம். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று உள்ளதாகவும் ரோஜா காம்பைன்ஸ் நிறுவனம் மூலம் காஜா மொய்தீன் தான் இப்படத்தை தயாரிக்கிறார் என்றும் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.