பயணிகள் யாரும் இல்லாத அந்த விமானத்தை ஏர் இந்தியா நிறுவனம் உஸ்பெகிஸ்தான் வான் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திரும்ப அழைத்துள்ளது.டெல்லியிலிருந்து மாஸ்கோவுக்கு ஆ320 ரக பயணிகள் விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்டுச் சென்று கொண்டு இருக்கும்போதே விமானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக டெல்லியிருந்து தகவல் வந்தது. இதையடுத்து, விமானம் டெல்லிக்கு மீண்டும் மதியம் 12.30 மணிக்கு திரும்ப வரழைக்கப்பட்டது.
விமானப் பயணம் துவங்குவதற்கு முன்பாக விமானிகள் கொரோனா சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது சோதிக்கப்பட்டபோது அந்த விமானிக்கு தொற்று இல்லை என்று தவறுதலாக குறிக்கப்பட்டுவிட்டது. பின்பு மறுமுறை பரிசோதனை பட்டியலை சரிபார்த்தபோது கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதையடுத்து, அவசரமாக மாஸ்கோ செல்லவிருந்த விமானம் நடுவழியிலிருந்து மீண்டும் டெல்லிக்கு திருப்பியனுப்பப்பட்டது. இன்று கிளம்பிய இந்த ஏர் இந்திய விமானம், புறப்பட்ட 2 மணி நேரத்துக்குப் பிறகு விமானிக்கு கொரோனா தொற்று உறுதியான தகவல் கிடைத்துள்ளது. பயணிகள் யாரும் இல்லாத அந்த விமானத்தை ஏர் இந்தியா நிறுவனம் உஸ்பெஸ்கிஸ்தான் வான் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திரும்ப அழைத்துள்ளது.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இயக்கி வருகிறது. விமானத்தை இயக்குவதற்கு முன்பாக விமான குழுவினரை கொரோனா பரிசோதனை செய்திட அரசு உத்தரவிட்டுள்ளது. ஏர் இந்தியா விமான நிறுவனம் கடந்த மார்ச் மாதம் முதல் 70% குறைவான கட்டணத்தில் தேசிய கடமையாக கருதி இந்த வந்தே பாரத் திட்டத்தின் மூலம் பயணிகளுக்காக செயலாற்றி வருகிறது.
இன்னும் புதிய வழிதடங்களில் பயணிக்கத் தொடங்க 3 வாரங்கள் ஆகும்” என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்னும் 9 நாடுகளுக்குப் பயணிக்க வேண்டியுள்ளதாகவும் கூறியுள்ளது. கடும் வேலை நெருக்கடிக்கு மத்தியில் விமான சேவையை தொடர்வதாகவும், டெல்லி - மாஸ்கோ விமான விவகாரத்தை மறைக்கவோ நியாயப்படுத்தவோ விரும்பவில்லை எனவும், கவனக்குறைவால் நடந்த இந்தத் தவற்றை மீண்டும் செய்ய மாட்டோம் எனவும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
Tags:
recent