பிரிட்டன் அமெரிக்கா போன்ற நாடுகள் பல சம்பவங்களை, கமுக்கமாக வைத்திருக்கும். நாட்டு மக்களுக்கு அறிவிப்பது கிடையாது. ஆனால் தற்போது அமெரிக்க பாதுகாப்பு அமைச்சின் ஆவணம் ஒன்று ஒரு சில நபர்களால் கசிந்துள்ளது. அதில் சில முக்கிய தகவல்கள் இருக்கிறது. அது என்னவென்றால் பிரித்தானியாவின் RAF RC-135 என்ற வேவு பார்க்கும் விமானம் கரும் கடலுக்கு மேலாக பறந்தவேளை. அதனை ரஷ்யாவின் SU27 ரக போர் விமானம் தாக்கியுள்ளது. ரஷ்ய விமானம் ஏவுகணையை ஏவியுள்ளது. சீறிப்பாய்ந்த ஏவுகணை
திடீரென செயல் இழந்து விட்டது. இதற்கு காரணம் ஏவுகணையில் ஏற்பட்ட கோளாறு. இதனால் ஏவுகணை கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விட்டது. இதனை நேரடியாக பிரிட்டன் விமானிகள் பார்த்தும் உள்ளார்கள். அந்த வேளை குறித்த பிரிட்டன் விமானத்தில் 2 விமானிகள் இருந்துள்ளார்கள். ரஷ்ய போர் விமானம் ஏவுகணையை ஏவியது, அவர்களுக்கு தெரியும். ஆனால் அதிஷ்ட வசமாக அவர்கள் உயிர் பிழைத்துள்ளார்கள். இப்படி பல சம்பவங்கள் ரஷ்ய எல்லையில் நடந்துள்ளது. ஆனால்...
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு இதனை அறிந்து இருந்தாலும் மக்களுக்கு தெரியப்படுத்துவது இல்லை. இதுபோலவே பல சம்பவங்கள் அமெரிக்க விமானங்களுக்கும் நிகழ்ந்துள்ளது. ஆனால் அமெரிக்கா வாய் திறப்பதே இல்லை. இப்படி யாராவது ஆவணத்தை கைப்பற்றி தகவலை வெளியிட்டால் மட்டுமே இதுபோன்ற செய்திகள் வெளியாகிறது.