வானத்திலிருந்து திடீரென கேட்ட அலறல் சத்தம்.. மிரண்டு போன ஆய்வாளர்கள்! ஏலியன் இருக்கு குமாரு

 

கான்பெரா: விண்வெளி ஏராளமான ரகசியங்களை கொண்டிருக்கிறது. சமீபத்தில் 53.8 நிமிடங்கள் நீளம் கொண்ட ஒரு அலறல் சத்தத்தை விஞ்ஞானிகள் பதிவு செய்திருக்கின்றனர். இது ஏலியன்கள் அனுப்பியதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் இருந்து அரே பாத்ஃபைண்டர் (ASKAP) தொலைநோக்கி வித்தியாசமான ஒன்றை கண்டுபிடித்தது. வானத்திலிருந்து வரும் வித்தியாசமான சிக்னல்களை கண்டுபிடிப்பதுதான் இதன் வேலை. அப்படி இருக்கையில், சுமார் 53.8 நிமிடங்கள் நீளம் கொண்ட ஒரு சத்தத்தை கண்டுபிடித்தது. ஏறத்தாழ ஒரு அலறல் போல இந்த சத்தம் இருந்ததாக சொல்லப்படுகிறது. இப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில் இதுவரை ஏலியன்களை நாம் கண்டுபிடிக்கவே இல்லை. அப்படியென்றால் இந்த சத்தத்தை அனுப்பியது யார்?

ஏலியன்களை தேடி: விண்வெளியில் ஏராளமான சூரியன்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சூரியனுக்கும் 7-8 கிரகங்கள் என்று வைத்துக்கொண்டாலும் லட்சக்கணக்கான கிரகங்கள் இருக்கின்றன. இதில் உயிர்கள் வாழ்வதற்கு தகுதியான கிரகம் என்று 1% கூடவா இருக்காது? 1% என்று எடுத்துக்கொண்டாலே நூற்றுக்கணக்கான கிரகங்கள் வருகிறது. இதில் ஒன்றில் கூடவா உயிர்கள் இருக்காது? ஆக நிச்சயம் ஏலியன்கள் என்று ஒன்று இருக்கும்.

 இந்த ஏலியன்களை முதலில் நாம் கண்டுபிடிக்கிறோமா? அல்லது அது நம்மை கண்டுபிடிக்கிறதா? என்பதுதான் தற்போதைய கேள்வி. வாயேஜர்: எனவே ஏலியன்களை கண்டுபிடிக்க 'வாயேஜர்' என்கிற பெயரில் 2 விண்கலன்களை நாசா அனுப்பியிருக்கிறது. ஒன்று ஆழ் அண்டத்தை நோக்கியும் இன்னொன்று வெளி அண்டத்தை நோக்கியும் பயணித்து வருகிறது. இதில் ஒரு விண்கலத்தில் நம்முடைய பூமி குறித்த தகவல்களை பதிவு செய்து அனுப்பியிருக்கிறோம். பூமி என்றால் எப்படி இருக்கும்? எவ்வாறு அதை கண்டுபிடிப்பது? பூமியில் எந்த மாதிரியான உயிர்கள் இருக்கிறது? எப்படி இங்கு வருவது என்பது குறித்த தகவல்கள் அதில் இருக்கின்றன.

ஒருவேளை நம்மை போலவே ஏலியன்கள் டெக்னாலஜியில் வளர்ச்சியிடைந்திருந்தால், அவை நாம் அனுப்பிய செய்தியை படித்துவிட்டு பூமிக்கு வரும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இப்போது கண்டுபிடிக்கப்பட்ட 53.8 நிமிட அலறல் சத்தத்திற்கும், நாம் அனுப்பிய செய்திக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதை ஆய்வாளர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சத்தம் எதை குறிக்கிறது? நமக்கு அனுப்பப்பட்ட எச்சரிக்கையா? அல்லது நட்பு அழைப்பா? அல்லது சும்மா 'ஹாய்' சொல்வதை போலவா? என பல கோணங்களில் சத்தத்தை விஞ்ஞானிகள் டி-கோட் செய்து வருகின்றனர்.

 சில விஞ்ஞானிகள் இது ஏலியன் அனுப்பிய செய்தியாக இருக்காது, 'பல்சார்' எனப்படும் ஒருவித நட்சத்திரத்திலிருந்து வெளியான சத்தமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர். ஆனால், இதற்கு முன்னர் கேட்காத சத்தம் இப்போது மட்டும் எப்படி கேட்டது? அல்லது இதற்கு முன்னர் ஏன் இந்த நட்சத்திரத்திலிருந்து சத்தம் வரவில்லை என்று வேறு சில ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எப்படி இருப்பினும் ஏலியன்கள் வந்தால், ஹாலிவுட் சினிமாக்களில் வருவதை போல பூமியை தாக்கி அழிக்காமல் இருக்க வேண்டும் என்பது அனைவரின் வேண்டுதலாக இருக்கிறது. அப்படி ஏதும் நடந்தால் தாக்குதலை சமாளிக்கும் வகையில் நம்மிடம் சக்தி வாய்ந்த ஆயுதம் ஏதும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


புதியது பழையவை

தொடர்பு படிவம்