உதடுகளை அழகு படுத்த பணம் தருகிறோம் என்று கூறி இளம் பெண்களை சீரழிக்கும் லண்டன் கும்பல் !

பிரித்தானியாவில் என்ன நடக்கிறது என்பது தான் பலருக்கு புரியவில்லை. ஏற்கனவே 1400 சிறுமிகளை சீரழித்த பாக்கிஸ்தான் கும்பல் பிரச்சனை ஓடிக் கொண்டு இருக்கும் இதேவேளை. லண்டனில் மேலும் ஒரு குழு, இளம் பெண்களுக்கு ஆசை காட்டி, தமது போதைப் பொருட்களை, துப்பாக்கிகளை மற்றும் பணத்தை கடத்த பாவித்துள்ளார்கள். லண்டனில் உள்ள பல இளம் பெண்கள், தமது முகத்தை அழகாக மாற்றவேண்டும் என்ற விடையத்தில் அடிமையாகிக் கிடக்கிறார்கள். ஆனால் அவர்கள் கைகளில் பணம் இல்லை.

உதடுகளை அழகு படுத்துவது, முகத்தில் உள்ள பருக்களை நீக்குவது மேலும் சொல்லப் போனால் பின் அழகை சரி செய்வது என்பது இளம் பெண்களின் கனவாக உள்ளது. இதனை சர்ஜரி(சத்திரி சிகிச்சை மூலமே செய்ய முடியும்) இதற்கு பணம் தேவைப்படுகிறது. இந்த வீக் பயீண்டை வைத்து, ஒரு கும்பல், இளம் பெண்களை மடக்கி. அவர்களை கள்ளக் கடத்தலில் ஈடுபடுத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளது. நேற்றைய தினம்(06) பொலிசார் ஒரு வீட்டை முற்றுகையிட்டுள்ளார்கள். அங்கிருந்து பெரும் தொகையான பணத்தையும் அவர்கள் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறுமிகள் இளம் வயதுப் பெண்கள் பலர் இதில் சம்மந்தப்பட்டு இருப்பதனால் பொலிசார் மேலதிக விபரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டார்கள். இது தொடர்பாக பல கைதுகள் இடம்பெற்றுள்ளது. இதிலும் ஆசிய இனத்தை சேர்ந்த ஒரு குமபலே மாட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 



புதியது பழையவை

தொடர்பு படிவம்