பிரிட்டனில் 1 லட்சம் பேர் இறந்தார்கள்- நானே பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன் என்று அழுத பொறிஸ் ஜோன்சன்

பிரித்தானியாவில் இன்றோடு 1 லட்சம் பேர் கொரோனா தொற்று காரணமாக இறந்துள்ளார்கள். இவர்கள் அனைவரது இறப்புக்குமான பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கிறேன் என்றும். என்னால் முடிந்த வரை நான் எல்லா வேலைகளையும் செய்துள்ளேன். ஆனால் இந்த இறப்புகளை என்னால் தடுக்க முடியவில்லை என்றும். தேசிய தொலைக்காட்சியில் பேசும் போது அவர் கண் கலங்கியுள்ளார்.

மேலும் கொரோனா தொற்று தொடர்ந்து 2 நாட்களாக மிகவும் குறைவான நிலையில் இருப்பது குறித்து அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. முழு அளவிலான லாக் டவுன் தற்போது திறம்பட செயல்படுவதால். கொரோனா தொற்று விகிதம் வெகுவாக குறைந்து வருகிறது என்றும். விரைவில் சில தளர்வுகளை பொறிஸ் அறிவிப்பார் என்றும், மேலும் பள்ளிகளை மட்டும் ஏப்பிரல் மாதத்திற்கு முன்னதாக திறக்க அவர் ஆர்வம் காட்டி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Contact Us