மோடியின் மொட்டை தலையில் அடி போட்ட விவசாயிகள்: தகர்த்துக் கொண்டு சென்ற ரக்டர்கள் இவைதான் !

முன்கூட்டியே கிளம்பிய டிராக்டர்கள் பேரணி.. தடுப்புகளை தகர்த்து ஏறிந்த விவசாயிகள்.. டெல்லியில் பதற்றம் என அதிர்வு இணையம் அறிகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணியை தொடங்கி உள்ளார்கள் வேளார்கள்.

விவசாயிகளின் ராக்டர்கள் டெல்லிக்கு உள்ளே வர முடியாத படி தடைகளை போட்டு இருந்தார்கள் பொலிசார். ஆனால் அதனை தகர்த்து எறிந்து விட்டு டெல்லிக்கு உள்ளே பல ஆயிரம் ரக்டர்கள் சென்றுவிட்டதாக அறியப்படுகிறது. இவை 1 லட்சத்தை தாண்டும் என்று கூறப்படும் நிலையில். டெல்லியில் பெரும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ஒட்டு மொத்தத்தில் ஒரு கை பார்த்து விடலாம் என்று விவசாயிகள் துணிந்து விட்டார்கள். மோடி என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை.

Contact Us