நமக்கும் ரேசன் கடையில ஏதாவது கொடுப்பாங்களா…? ‘சும்மா போய் பார்ப்போம்…’ ‘வரிசையில அமைதியா நின்னவங்க…’ – திடீர்னு அலறியடிச்சு தெறிச்சுட்டாங்க…!

பழநி ரேஷன் கடைக்குள் புகுந்த கோதுமை நாகத்தை தீயணைப்புத் துறையினர் உயிருடன் பிடித்து காட்டிற்குள் கொண்டுபோய் விட்டனர்.

பழநி, ரயில்வே பீடர் சாலையில் ஒரு ரேஷன் கடை உள்ளது. நேற்று (23-02-2021) பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஏராளமானோர் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது ரேஷன் கடைக்குள் சுமார் 5 அடி நீளமுள்ள கோதுமை நாக பாம்பு புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள் அலறி அடித்து ஓடினர்.

இதுகுறித்து பழநி தீயணைப்புத்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப்படையினர் சுமார் 5 அடி நீளமுள்ள கோதுமை நாகபாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் பிடிபட்ட பாம்பை அடர் வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.