சொக்கும் தூக்கம், கையில சாப்பாடு தட்டு’… ‘பாவம் அந்த புள்ள’… ‘வைரலான வீடியோ’… கண்டித்த நெட்டிசன்கள்!

குழந்தைகள் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் கியூட்டான ஒன்று. ஆனால் தற்போதெல்லாம் வெளியாகும் சில வீடியோகள் குழந்தைகளை வலுக்கட்டாயமாக சில விஷயங்களைச் செய்ய வைத்து எடுக்கிறார்களோ என்ற சந்தேகம் பலருக்கு எழுந்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றிற்கு நெட்டிசன்கள் பலரும் இருவேறு கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.

குழந்தை ஒன்று தூக்கக் கலக்கத்துடன் அமர்ந்துள்ளது. அதன் கையில் சாப்பாடு தட்டு ஒன்றும் இருக்கிறது. பாதி சாப்பிட்ட கையுடன் இருக்கும் அந்த குழந்தைக்கு தூக்கம் சொக்குகிறது. இதனால் தூங்கித் தூங்கி வழியும் அந்த குழந்தை திடீரென தூக்கக் கலக்கத்தில் கீழே சாய்கிறது. இதனை ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ள நிலையில், அந்த வீடியோ தற்போது ட்விட்டரில் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த சிலர், தூக்கம் வந்தாலும் பையன் சாப்பாடு தட்டை மட்டும் விட்டு கொடுக்கவில்லை எனக் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்கள். ஆனால் பெரும்பாலான நெட்டிசன்கள் இதுபோன்று குழந்தைகளை வைத்து வீடியோ எடுப்பது தவறு எனவும், விளையாட்டாகச் செய்வது சில நேரங்களில் ஆபத்தில் சென்று முடியலாம் எனவும் பதிவிட்டுள்ளார்கள்.