தொற்று எண்ணிக்கை வெறும் 6,000 பேருக்கு 144 பேர் இறந்தார்கள்: முன்னேறும் பிரித்தானியா !

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை வெறும் 6,000 பேர் என்று சுகாதார துறை அறிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 144 பேர் இறந்துள்ளதாகவும் மேலும் அறியப்படுகிறது. கொரோனா தொற்று பெரும் வீழ்ச்சி கண்டுள்ள அதேவேளை, சாவு எண்ணிக்கையும் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது.

பிரிட்டனில் தற்போது கோடை காலம் போல வெப்பம் அதிகரித்துள்ளதால், பலர் வீட்டில் பின் புறம் BBQ செய்து மகிழ்கிறார்கள். மேலும் பலர் உடல் பயிற்ச்சிக்காக வெளியே செல்கிறார்கள். இது இவ்வாறு இருக்க பிரேசில் உருமாறிய வைரஸ் தற்போது பிரிட்டனில் பரவி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 6 பேருக்கு இந்த வைரஸ் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.