‘5 ரூபாய் சாப்பாடு’… ‘கர்ப்பிணி பெண்களுக்கு 731 நாட்கள் விடுமுறை’… திரும்பிப் பார்க்க வைத்த மம்தாவின் தேர்தல் அறிக்கை!

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

Mamata Banerjee Promises Minimum Annual Income In Trinamool Manifesto

மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்தச்சூழ்நிலையில் மம்தா பானர்ஜி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.  தேர்தல் வாக்குறுதிகளில் முக்கிய அம்சங்கள்.

மாணவர்களுக்கு 4 சதவீத வட்டியில் 10 இலட்ச ரூபாய்க்கான கடன் அட்டை வழங்கப்படும்

கர்ப்பிணிப் பெண்களுக்கு 731 நாட்கள் பேறுகால விடுமுறை அளிக்கப்படும்

ஏழைகள் மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்

மாநிலத்தின் 1.6 கோடி குடும்பத்திற்கும் குறைந்த பட்ச வருமானமாக மாதம் 500 (பொதுப்பிரிவினர்) மற்றும் 1000 (எஸ்சி/எஸ்டி/ஓபிசி) ரூபாய் வழங்கப்படும்

சிறுகுறு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்

ஒன்றரை கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு தேடி வந்து ரேசன் பொருட்கள் வழங்கப்படும்

2500 ‘மா’ கேண்டீன்கள் மூலமாக 5 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கப்படும்

அனைத்து வீடுகளுக்கும் 24 மணிநேரமும் மின்சாரம் வழங்கப்படும்