ஒரே நாளில் உலகின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்தை இழந்த எலோன் மஸ்க்(டெஸ்லா)

டெஸ்லா நிறுவன பங்குகளின் விலை திடீரென சரிந்ததால், ஒரேநாளில் 11 பில்லியன் டாலரை எலன் மாஸ்க் இழந்தார். இதன் காரணமாக உலகப்பணக்காரர்கள் பட்டியலில் மஸ்க் முதல் இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு இறங்கியுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. வியாழக்கிழமை டெஸ்லாவின் பங்குகள் 6.9 சதவீதம் சரிந்து 653.16 டாலராக இருந்ததால், அவரது நிகர சொத்து மதிப்பிலிருந்து 11 பில்லியன் டாலர்கள் குறைந்தது. இதன் காரணமாக பில்லியனர் தொழிலதிபர் எலோன் மஸ்க் மீண்டும் உலகின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்த்தை இழந்தார்.

ஒரு வார காலமாக டெஸ்லா பங்குகள் அசுரவேகத்தில் உயர்ந்ததன் காரணமாக கடந்த திங்களன்றுதான் (மார்ச்.15), எலன் மஸ்க் அமேசான் தலைவர் ஜெஃப் பெசோஸை மீண்டும் முந்தி முதல் இடத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டாம் நிலைக்கு சென்றுவிட்டார். இன் நிலையில் அமேசன் நிறுவனர் ஜெஃப் பெசோஸை மீண்டும் முதலாவது பணக்காரர் என்ற அந்தஸ்தை எட்டிப் பிடித்து விட்டார்.