ஒரு கோடி ரூபாவை அப்படியே குப்பையில் போட்ட கட்சி உறுப்பினர்- பறக்கும் படை திரத்தியதால் …

தேர்தல் பணிகளுக்காக கட்சித் தலைமை கொடுக்கும் பணத்தை கீழ்மட்ட நிர்வாகிகளால் பதுக்கப்படும் சம்பவங்கள் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. `தேர்தல் திருவிழாவில் கிடைத்த வரையில் லாபம்’ எனக் கட்சி நிர்வாகிகள் கருதுவதால், தி.மு.கவும் அ.தி.மு.கவும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.

தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது?

கோடிகள் என்பது இந்தியாவில் ஜூ… ஜூ… பி… தான். முசுறி வேட்ப்பாளர் ஒருவர் தேர்தல் பணிக்காக 3 கோடி ரூபாவை காரில் எடுத்துச் சென்றுள்ளார். இதனை அறிந்த ரவுடிக் கும்பல் ஒன்று அவர்களை துரத்தி மடக்கிப் பிடித்து 2 கோடி ரூபாவை அடித்துச் செல்ல. அதே நேரம் அங்கே பறக்கும் படை வேறு வந்து கொண்டு இருக்கிறது எப்படியாவது தப்பிச் செல்லுங்கள் என்று அவர்களுக்கு தவல் வரவே.

மீதமுள்ள 1 கோடி ரூபாவையும் அப்படியே பற்றைக்குள் எறிந்துவிட்டு சென்றுவிட்டார்கள் அ.தி.மு.க கட்சியினர். இதனை அடுத்து அங்கே வந்த பறக்குப் படியினர் பணத்தை மீட்டுச் சென்றுள்ளார்கள். சுமார் ஓவொரு தொகுதிக்கும் அ.தி.முக மற்றும் தி.முக சுமார் 10 கோடி முதல் 15 கோடிகளை செலவு செய்து வருகிறார்கள். இது போன்றே 234 தொகுதிக்கும் பணம் செல்கிறது என்றால் எத்தனை நூறு கோடிகள் என்று நீங்களே கணக்குப் பாருங்கள்.