92 வயதாகியும் ஜம்முனு இருக்கும் நடிகர் சத்யராஜின் அம்மா.. செம வைரலாகும் க்யூட் புகைப்படம்

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக இருந்து ஹீரோவாக மாறி பல வெற்றி படங்களை கொடுத்த நடிகர்களில் ரஜினிக்கு அடுத்த இடத்தில் உள்ளவர் தான் சத்யராஜ். ரஜினியைப் போலவே இவரும் வில்லத்தனத்தில் மூலம் தான் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.

அதன் பிறகு அரசியல் நக்கல், நையாண்டி என தனக்கு என்ன வருமோ அதை தெளிவாக தெரிந்துகொண்டு இயக்குனர் மணிவண்ணனுடன் கை கோர்த்தது பல வெற்றிப்படங்களை கொடுத்து வந்தார்.

குணச்சித்திர நடிகராக நடிக்க வேண்டிய வயதில் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம் பிடித்து ஒரு சில படங்களில் ஹீரோவாக நடிக்க, அந்த படங்கள் தயாரிப்பாளரின் கையை கடிக்க, ஹீரோ வேஷம் நமக்கு இப்போதைக்கு ஒத்து வரவில்லை என ஒதுங்கிவிட்டார்.

ஹீரோ இல்லை என்றால் என்ன, முன்னணி நடிகர்களுக்கு தந்தை வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் மீண்டும் நடிக்கலாம் என தன்னுடைய கேரியரை மாற்றினார். அது ஹீரோவை விட அவருக்கு பெரிய அளவு பெயரை வாங்கிக் கொடுத்து விட்டது.

பாகுபலி கட்டப்பாவை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியுமா. பாகுபலிக்கு பிறகு அதிக சம்பளம் வாங்கும் சிறந்த குணசித்திர நடிகர் என்ற பெயருடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது சத்யராஜுக்கு 66 வயதாகிறது.

 

நீண்ட பல வருடங்களுக்கு பிறகு சத்யராஜ் தன்னுடைய அம்மாவின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அவரது அம்மாவின் பெயர் நாதம்பாள் காலிங்கராயர். இவருக்கு தற்போது 92 வயது ஆகிறதாம். 92 வயதில் இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கும் சத்யராஜின் அம்மா புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Contact Us