ஒரே நாளில் 3 முறை சிறுமியை கற்பழித்த நபருக்கு 30 ஆண்டுகள் சிறை விதித்த நீதிமன்றம் !

அமெரிக்காவில் கோரி டியன் கோட்ஸ் என்ற நபர் கடந்த வருடம் ஜனவரி மாதம் 20ஆம் தேதி 15 வயது சிறுமியுடன் ஒரு வீட்டில் தங்கி இருந்தார். அப்போது அந்த நபர் சிறுமியின் உடையை களைந்து தவறாக நடந்து கொண்டுள்ளார். இதற்கு அந்த சிறுமி இதுபோன்ற செய்யாதீர்கள் என கூறியுள்ளார். ஆனால் அதையும் மீறி கோரி டியன் கோட்ஸ் அந்த சிறுமியை ஒரே நாளில் 3 முறை வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து சிறுமியின் தாயார் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கோரி டியன் கோட்ஸ் என்ற நபரை கைது செய்து விசாரணை செய்துள்ளனர்.

ஆனால் அந்த நபர் இந்த குற்றத்தை மறுத்ததால் டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இந்தப் பரிசோதனையில் அவர் வசமாக போலீசாரிடம் சிக்கிக் கொண்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் அந்த நபருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

Contact Us