லண்டன் வந்திறங்கிய ஜோ பைடனின் கார்- என்ன எல்லாம் உள்ளது தெரியுமா

பிரிட்டன் வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பயணம் செய்ய என அவரது பிரத்தியேக கார் லண்டன் கொண்டுவரப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவ விமானத்தில் அவரது கார் லண்டன் வந்திறங்கியுள்ளது. இந்த காரில் என்ன எல்லாம் இருக்கிறது என்று கேட்டால் நீங்கள் ஆடிப் போய் விடுவீர்கள். அமெரிக்க அதிபர் பயணிக்கும் இந்த காரின் முன் பகுதியில் இரண்டு அதி நவீன துப்பாக்கிகள் உள்ளது. அதனூடாக முன்னால் செல்லும் கார்களை சுட முடியும். மேலும் ஓட்டுனர் மற்றும் முன் ஆசனத்தின் கதவுக்கு பக்கமாக மேலும் 2 துப்பாக்கிகள் உள்ளது. பின் இருக்கையில் அதிபர் இருக்கும் இடத்தில் சாட்டலைட் மூலம் அமெரிக்க பெண்டகனை நேரடியாக தொடர்பு கொள்ள ஏதுவாக சாட்டலைட் போன் வசதி உள்ளது.

காருக்கு அடியில் வெடி குண்டை தாங்க வல்ல, அலோய் எனப்படும் உலோகம் போடப்பட்டுள்ளது. கார் டயர்களை துப்பாக்கியால் சுட முடியாது. அப்படியே சுட்டாலும் அது வெடிக்காது. கார் கதவுகளில் உள்ள கண்ணாடிகள் 8 இஞ்சி தடிப்புடையவை. மேலும் குண்டு துளைக்காதவை. காரின் பின் புறமாக இருந்து வெளியே டியர் கேஸ் என்ற புகையை ஏவ முடியும். இதனால் காருக்கு வெளுயே புகை, மற்றும் சுவாசிக்க முடியாத நிலை தோன்றும். ஆனால் காருக்கு உள்ளே தேவையான அளவு ஆக்சிஜன் உள்ளது. அது சில நாட்கள் வரை தாக்குப் பிடிக்கும்.

இதனை விட மேலும் பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது. ஆனால் அவை அனைத்தும் பரம ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது. ஒட்டு மொத்தத்தில் சொல்லப் போனால் வெளியே இருந்து காரை உடைத்து உள்ளே செல்வது என்பது முடியாத காரியம்.

Contact Us