ஆசையாக பேசி நள்ளிரவில் நண்பனை அழைத்துச் சென்று கொலை செய்த 16வயது சிறுவன் !

இங்கிலாந்தில் உள்ள பாஸ்டன் என்ற நகரத்தில் வனப்பகுதி ஒன்று உள்ளது. அங்கு கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் ராபர்ட்ஸ் பன்சிஸ் என்ற 12 வயது சிறுவனின் உடல் கண்டறியப்பட்டது. அவரது மார்பு, வயிறு, கழுத்து மற்றும் தலை பகுதிகளில் பலமாக கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் ராபர்ட்ஸின் நண்பனான, 16 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நள்ளிரவில் ராபர்ட்ஸின் வீட்டிற்கு சென்ற இச்சிறுவன் ஆசையாக பேசி ராபர்ட்ஸை மரங்கள் நிறைந்த பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த சிறுவன் போதை மருந்து கும்பலுடன் தொடர்பில் இருக்கிறார்.

எனவே போதை மருந்து விற்பனைக்கு ராபர்ட்ஸையும் பழக்கப்படுத்தியுள்ளார். இதில் திருடியதாக ராபர்ட்ஸ் மேல் சந்தேகமடைந்த அந்த சிறுவன் தனியாக அழைத்துச்சென்று, கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, தப்பியது தெரியவந்துள்ளது.

Contact Us