நடுக்கடலில் தத்தளித்த உயிர்கள்; வெளியான காணொளியால் பெரும் பரபரப்பு!

அமெரிக்காவின் சர்வதேச விமான நிலையமொன்றிலிருந்து புறப்பட்ட போயிங் 737 சரக்கு விமானம் நடுக்கடலில் மூழ்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சரக்கு விமானம் அமெரிக்காவின் Hawai மாநிலத்தின் தலைநகரான Honoluluவில் அமைந்துள்ள Daniel K Inouye என்ற சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சிறிது நேரத்திலேயே கடலுக்குள் இறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போயிங் 737 சரக்கு விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விமானிகள் உடனடியாக விமானத்தை Daniel K Inouye விமான நிலையத்திற்கு திருப்ப முயன்றுள்ளனர். ஆனால், விமான நிலையம் வரை செல்ல முடியாததால் கடலிலே விமானத்தை தரையிறக்கியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தில் 2 விமானிகள் பயணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் கடலில் மூழ்கிய நிலையில், விமானிகள் விமானத்தை விட்டு வெளியேறி தண்ணீரில் தத்தளித்துள்ளனர். தகவலறிந்த அமெரிக்க கடற்படை, சம்பவ இடத்திற்கு ஹெலிகொப்டருடன் விரைந்து உயிருக்கு போராடிய விமானிகளை பத்திரமாக மீட்டு கரைக்கு திரும்பியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு விமானிகளில் ஒருவர் ஆபத்தான நிலமையில் இருப்பதாகவும் விமானம் மூலம் குயின்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்படுவதாகவும் Hawai மாநிலத்தின் போக்குவரத்து அதிகாரி தெரிவித்ததாக மேற்கோள் காட்டி எச்.என்.என் செய்தி வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Contact Us