இன்னொரு தடவை கிட்ட வந்தால் உங்கள் வீரர்கள் காயப்படுவார்கள்- நேரடியாக மிரட்டிய ரஷ்ய கடல்படை !

பிரித்தானியாவின் 2 நாசகாரி போர் கப்பல்கள், கரும் கடலில் ரஷ்யா மற்றும் கிரீமியா ஆகிய பகுதிகளுக்கு இடையே உள்ள கடல் பரப்பில் நிலை கொண்டுள்ளது. இதனால் கடும் ஆத்திரமடைந்துள்ள ரஷ்யா, கிரீமியா நோக்கி பிரிட்டன் கப்பல் நகர்ந்தால், உங்கள் வீரர்கள் காயப்பட நேரிடும் என்று, நேரடியாகவே எச்சரிக்கை விடுத்துள்ளது. கிரீமியா என்ற உக்கிரேன் நாட்டின் ஒரு பரப்பை, ரஷ்யா கைப்பற்ற முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தடுக்கும் நோக்கில் தான் பிரித்தானியா தனது கடல் படையை அங்கே அனுப்பி உள்ளது. இதனால் ரஷ்யா மிகவும் ஆத்திரமடைந்துள்ளது. இன் நிலையில் தான்..

இந்த நேரடி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் கடல் படை கப்பல் தரித்து நிற்க்கும் இடத்தில் இருந்து சில மைல் தொலைவில் ரஷ்ய போர் கப்பல் ஒன்று தரித்து நிற்பதோடு, பல நீர்மூழ்கிக் கப்பல்களும் அவ்விடத்தில் நிலை கொண்டுள்ளது.

Contact Us