ஒலிம்பிக் பதக்கத்துடன் நாடு திரும்பிய மீராபாய் சானு!.. செம்ம ஷாக் கொடுத்த ‘அந்த’ அறிவிப்பு!.. வாழ்நாள் முழுவதும் கிடைக்கப்போகும் ‘சல்யூட்’ மரியாதை!

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த மீராபாய் சானுவுக்கு அம்மாநில அரசு சர்ப்ரைஸ் பரிசு ஒன்றை அளித்துள்ளது.

tokyo olympic mirabai chanu asp manipur government police

டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு பளு தூக்குதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

இந்நிலையில், டோக்கியோவில் இருந்து விமானம் மூலம் தனது பயிற்சியாளர் உடன் மீரா பாய் டெல்லி வந்தடைந்தார். அப்போது பாதுகாவலர்கள் புடை சூழ, ஆனந்தக் களிப்புடன் நடந்துவந்த அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மீரா பாய், 5 ஆண்டு கால அர்ப்பணிப்பின் பலனாக வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இதற்கிடையே, வெள்ளிப்பதக்கம் வென்ற மீரா பாயை கௌரவிக்கும் விதமாக மணிப்பூர் காவல்துறையில் அவருக்கு கூடுதல் கண்காணிப்பாளர் (Additional Superintendent of Police) பதவி வழங்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை மணிப்பூர் முதலமைச்சரின் செயலகம் வெளியிட்டுள்ளது. இதனை, அவரது கடின உழைப்புக்கு கிடைத்த பலன் எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்

Contact Us