இந்த பிரபல நடிகர் கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை; பெரும் அதிர்ச்சி!

டிவி தொடர்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் வேணு அரவிந்த். ராதிகாவுடன் வாணி ராணி,அலைகள் உள்ளிட்ட பல தொடர்களில் முன்னணி வேடங்களில் நடித்திருந்தவர் வேணு அரவிந்த்.
இவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு நிமோனியாவால் பாதிக்கப்பட்டார். பின்பு அவரது மூளையில் இருந்த கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டிருக்கிறது. அப்போது அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டார்.
இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமாக ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Contact Us