கள்ளக்காதலுக்கு உறவினர் எதிர்ப்பு! தற்கொலை செய்துகொண்ட கள்ளக்காதலர்கள்

 

பழனி இடும்பன் கோயில் மலை மீது கேரளாவைச் சேர்ந்த ஆண் -பெண் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பழனி இடும்பன் கோவில் மலைமீது விஷம் அருந்திய நிலையில் ஆண், பெண் உயிருக்கு போராடி வருவதாக பழனி நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உயிருக்கு போராடிய இருவரையும் மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் கிடைத்த ஆதார் அட்டை மற்றும் பூச்சி மருந்து பாட்டில்களை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் இருவரும் கேரள மாநிலம் அணக்கார, ஜக்குபல்லம் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (45) மற்றும் குமரி(43) என்பது தெரியவந்தது. ராதாகிருஷ்ணனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ள நிலையில் ஏற்கனவே திருமணமான குமரி என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதும், இருவரின் உறவிற்கும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த இருவரும் பழனிக்கு வந்து தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

Contact Us