கினியாவில் துப்பாக்கிசூடு சத்தம்.. குவிக்கப்பட்ட இராணுவ வீரர்கள்.. வெளியான வீடியோ..!!

 

கோனாக்ரியில், இன்று ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் பயங்கரமாக துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டிருக்கிறது. அதே நேரத்தில், தலைநகரில் இருக்கும் வீதிகளில் கவச வாகனங்களிலும், லாரிகளிலும் ராணுவ வீரர்கள் சோதனைக்கு சென்றிருக்கிறார்கள்.

அதிகமான அமைச்சர்களும், ஜனாதிபதி மாளிகையும் இருக்கும் கலூம் சுற்றுப்புறத்தோடு பெரிய நிலப்பகுதியை சேர்க்கும் பாலம் அடைக்கப்பட்டிருப்பதாகவும், இராணுவ வீரர்கள் ஆயுதங்களோடு ஜனாதிபதி மாளிகைக்கு சுற்றி நிற்க வைக்கப்பட்டிருப்பதாகவும் இராணுவ வட்டாரம் தெரிவித்திருக்கிறது.

எனினும், ஜனாதிபதி ஆல்பா கான்டேக்கு காயம் ஏற்படவில்லை, என மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார், எனினும், ஜனாதிபதி தொடர்பில் பிற தகவல்கள் வெளிவரவில்லை. ஆனால், இணையதளங்களில் வெளியான வீடியோக்களில், நகரில் பயங்கரமாக துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்கிறது. எதற்காக துப்பாக்கியால் சுடப்பட்டது என்பது குறித்து, தெரிவிக்கப்படவில்லை.

Contact Us