குவாண்டமோ சிறையில் இருந்து ஒபாமா விடுவித்த இந்த 4 பேரும் தான் இன்றைய தலிபான் தலைவர்கள் !

பேர்கடால் என்னும் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரை 2014ம் ஆண்டு தலிபான்கள் உயிரோடு கைது செய்தார்கள். இதனை அடுத்து குறித்த அமெரிக்க ராணுவ வீரரை விடுவிக்க, அமெரிக்கா தலிபான்களோடு பேரம் பேசியவேளை. குவாண்டமோ சிறையில் உள்ள தமது 4 தீவிரவாதிகளை விடுதலை செய்தால். தாம் அமெரிக்க வீரரரை விடுதலை செய்வதாக தலிபான் தெரிவித்தது. இதன் அடிப்படையில் பராக் ஒபாமா 4 தலிபான்களை விடுதலை செய்தார். அந்த 4ல்வரும் தான் தற்போது ஆப்கானிஸ்தானில் 4 பெரும் படைத் தளபதிகளாகவும் தலைவர்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். இதில் வேதனையான விடையம் என்னவென்றால்..

குறித்த அமெரிக்க ராணுவ வீரர், அமெரிக்க ராணுவத்தை விட்டு தப்பி ஓடி ஆப்கானில் இருந்து வேறு நாடு செல்ல திட்டமிட்டு இருந்தாராம். ஆனால் பராக் ஒபாமா அதனைக் கூடப் பார்காமல் மனித நேயத்தோடு செயல்பட்டு போர்கடால் என்ற இந்த ராணுவ விரரைக் காப்பாற்றி உள்ளார் என்பது தான்.

Contact Us