சரமாரியாக அடி வாங்கிய பெண் போலீஸ்…. விதியை மீறிய நபரின் வெறிச்செயல்…. ஆஸ்திரேலியாவில் நடந்த சம்பவம்….!!

 

ஆஸ்திரேலிய நாட்டில் 43 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கொரோனா குறித்த விதிமுறைகளை மீறி சாலையோரம் நின்றுள்ளார். இதனால் பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் விதியை மீறி நின்றுகொண்டிருந்த அந்த நபரை அங்கிருந்து கிளம்புமாறு வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் அந்த நபர் திடீரென பெண் காவல்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அருகிலிருந்த மற்றொரு பெண் காவல்துறை அதிகாரி உதவிக்கு வருமாறு கத்திக் கூச்சலிட்டுள்ளார்.

இதனையடுத்து பிற காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அந்த நபர் மற்றொரு காவல் துறை அதிகாரியையும் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனால் விதியை மீறி சாலையோரம் நின்றதோடு மட்டுமின்றி காவல்துறை அதிகாரிகளையும் சரமாரியாக தாக்கிய அந்த நபரின் மீது போலீஸ் அதிரடியாக வழக்கு பதிவு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

Contact Us