தீ வைத்த மனைவி, உயிர் பிழைக்க போராடிய கணவன், கல்லை போட்டு கொன்ற கொடூரம்..!

பெங்களூருவில் தகாத உறவுக்கு தடையாக இருந்த கணவனை கொன்ற மனைவி கைது!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள பட்டிஹள்ளியில் வசித்து வந்தவர் நாராயணப்பா (52). இவருக்கு அன்னபூர்ணா (36) என்ற மனைவியும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில், நாராயணப்பா நெலமங்களாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வந்தார்.

அன்னபூர்ணா வெங்காய மண்டியில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கணவன், மனைவி இருவரும் அடிக்கடி கருத்துவேறுபாடு காரணமாக சண்டையிட்டு வந்துள்ளனர். இந்த சூழலில் அன்னபூர்ணாவுக்கு பெயிண்ட் வேலை செய்து வந்த

ராமகிருஷ்ணா (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியுள்ளது.

நாராயணப்பா வேலைக்கு சென்றுவிடும் வேளையில் அன்னபூர்ணாவை சந்திக்க ராமகிருஷ்ணா அடிக்கடி சென்று வந்துள்ளார். இருவரும் அதே வீட்டில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாராயணப்பாவுக்கு தெரிந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னபூர்ணாவிடம் சண்டையிட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றவே கணவனின் தலையில் பெட்ரோலை ஊற்றி அன்னபூர்ணா தீ வைத்துள்ளார்.

தீ எரிய தொடங்கியதும் வீட்டை விட்டு பதறி அடித்து ஓடி வந்த நாராயணப்பா வெளியே இருந்த கழிவு நீர் கால்வாயில் விழுந்துள்ளார். அப்போது அங்கு வந்த ராமகிருஷ்ணா நாராயணப்பாவின் தலையில் கல்லை போட்டுள்ளார். அதனால் தலையில் படுகாயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே நாராயணப்பா உயிரிழந்தார். சம்பவம் அறிந்து வந்த ஜெயாநகர் போலீசார் அன்னபூர்ணாவையும், காதலன் ராமகிருஷ்ணாவையும் கைது செய்தனர்.

தகாத உறவுக்கு தடையாக இருந்ததால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மனைவியிடம் இருந்து தப்பி ஓடிய நபர் உயிர் பிழைக்கக்கூடாதென்று தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Contact Us