சம்பள விஷயத்தில் நயன்தாராவை ஓரங்கட்டிய நடிகை.. ரெண்டு துண்டு துணியில் மொத்தமும் மாறிடுச்சி

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் பாலிவுட்டில் இருந்து புது நடிகைகளை களமிறக்கி வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது புதுவரவாக பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். இவரது முதல் படமே பிரம்மாண்ட இயக்குனர் படம் என்பதால் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் இயக்குனர் சங்கர் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் ராம் சரணிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். இவர் ஏற்கனவே தெலுங்கு படங்களில் நடித்துள்ளதால், இவரை ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது.

ன்னதான் கியாரா அத்வானி தெலுங்கு படங்களில் நடித்திருந்தாலும் பாலிவுட் படங்களில் பிசியான பின்னர் தெலுங்கு சினிமாவை அவர் கண்டுகொள்ளவே இல்லை. தொடர்ந்து ஹிந்தியில் வெப்தொடர் மற்றும் படங்களில் துணிச்சலான கதாபாத்திரம் என நடித்து வந்த கியாராவை, ராம் சரண் நடிக்கும் படத்திற்காக தமிழ் திரையுலகிற்கு அழைத்து வந்துள்ளார் இயக்குனர் சங்கர்.

இது நல்ல செய்தியாக இருந்தாலும் கியாராவின் சம்பளத்தை கேட்டால் தான் சற்று அதிர்ச்சியாக உள்ளது. அதாவது சங்கர் மற்றும் ராம்சரண் கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு மட்டும் சுமார் 5 கோடி ரூபாய் சம்பளமாக கியாரா அத்வானி பெற உள்ளாராம். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கியாரா அத்வானி பெறும் இந்த சம்பளம் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாராவைவிட அதிகம் என கூறுகிறார்கள். அதிலும் நயன்தாரா தமிழ் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தென்னிந்திய மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் கியாரா அத்வானிக்கு இதுதான் தமிழில் முதல் படமாகும்.

இருப்பினும் பிரம்மாண்ட இயக்குனர் படம் என்றாலே பட்ஜெட்டும் பிரம்மாண்டமாகவே இருக்கும் எனவே இந்த சம்பளம் எல்லாம் ஒன்றும் பெரிய செலவே இல்லை என ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் ரெண்டு துண்டு துணியாக இருந்தாலும் நடிக்க ரெடி என கிளம்பி விட்டாராம்.

Contact Us