“ஒருத்தன் துப்பாக்கியை பிடிக்க ,மூணு பேர் குதறி எடுக்க …”-நாலு பேருக்கு நடுவே சிக்கிய பெண்

 

உத்தரபிரதேச மாநிலம், ஜீவாரில் 55 வயதான தலித் பெண் அங்குள்ள தன்னுடைய வயலில் விவசாய வேலைகள் செய்து வந்தார் .அப்போது அதே பகுதியை சேர்ந்த மகேந்திரா என்ற நபர் அந்த வயலுக்கு பக்கத்தில் உள்ள ஒரு களத்தில் குடித்து கொண்டிருந்தார் .அவர் தினமும் அந்த பெண் வயலில் வேலைக்கு வருவதை அந்த இடத்தில் குடித்து கொண்டே நோட்டமிட்டு வந்துள்ளார் .அந்த நபர் மீது ஏற்கனவே பல கிரிமினல் வழக்குகள் போலீசில் இருக்கிறது .
இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமையன்று அந்த தலித் பெண் வழக்கம் போல் விவசாய வேலைக்கு அந்த வயலுக்கு வந்தார் .அப்போது அங்கு குடிபோதையில் அந்த மஹேந்திராவும் வந்தார் .பின்னர் அவர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய தன்னுடைய மேலும் மூன்று நண்பர்களை அழைத்தார் .அவரின் பேச்சை கேட்டு ஆசைப்பட்டு மேலும் மூவர் துப்பாக்கி எடுத்து கொண்டு அந்த இடத்திற்கு வந்தனர் .பின்னர் அந்த நாலு பேரும் அந்த பெண்ணை துப்பாக்கியை காமித்து மிரட்டினர் .அதனால் பயந்து போன அந்த பெண் அவர்கள் கூப்பிட்ட இடத்திற்கு வந்தார் .பின்னர் ஒருவர் துப்பாக்கியை பிடித்து கொண்டு அந்த பெண்ணை மிரட்டியபடி இருக்க மற்றவர்கள் ஒவ்வொருவராக வந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர் .அதன் பின்னர் அந்த பெண் அவர்களிடமிருந்து தப்பி சென்று அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் தந்தார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த குற்றவாளிகளை கைது செய்தனர் .

Contact Us