“ரெண்டாவதா வந்த புருஷனும் இப்படி செய்றானே” -அடுத்து காண்டான மனைவிக்கு பெட் ரூமில் நேர்ந்த பயங்கரம்

 

குஜராத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள மீதன் கிராமத்தில் வசிக்கும் பாவனா என்ற பெண் நரேஷ் மார்வாடி என்பவரை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மணந்தார் .அதன்பிறகு அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது .அந்த குழந்தை பிறந்து எட்டு மாதம் ஆகிறது .அந்த பெண் அந்த நரேஷை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் .ஆரம்பத்தில் அந்த நரேஷுக்கு இனித்த அந்த மனைவி நாளடைவில் கசக்க ஆரம்பித்தார் .அதனால் அந்த பெண்ணை எந்நேரமும் திட்டிக்கொண்டே இருந்தார் .மேலும் அவர் குழந்தையை சரியாக கவனிக்கவில்லை என்று குறை கூறினார் .
இதனால் அந்த பெண் மிகவும் மன உளைசலுக்கு ஆளானார் .இரண்டாவதாக வந்த கணவனும் இப்படி கொடுமை செய்து தன்னை விரட்ட நினைக்கிறாரே என்று வேதனைப்பட்டார் .ஆனாலும் அவர் சமாளித்து வாழ்ந்து வந்தார் .இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த பெண் குழந்தையோடு பெட் ரூமில் இருந்த போது அந்த நரேஷ் கெரசினை கொண்டு வந்து அவர் மீதும் அவரின் குழந்தை மீது கொட்டி தீ வைத்து கொளுத்தினார் .அதன் பிறகு இருவரும் தீயில் எரிந்த போது பக்கத்து வீட்டு நபர் அவர்களை காப்பாற்றி அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலில் சேர்த்தார் .அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் .அதன் பிறகு போலீசார் வழக்கு பதிந்து அந்த கணவன் நரேஷை கைது செய்தனர் .

Contact Us