வேட்பாளர் வேட்டையில் தீவிரமாக இறங்கிய தமிழ்கட்சி!

 

மாகாணசபை தேர்தல் நடத்த இருப்பதாக அரசு கூறிவரும் நிலையில் வட மாகாண சபை வேட்பாளர் வேட்டைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. வடக்கில் பிரதான தமிழ்கட்சி ஒன்று மாகாணசபை தேர்தல் வேட்பாளராக பல்கலைக்கழகம், மற்றும் ஆணைக்குழுக்களில் அங்கம் பணியாற்றியவர்களிடம் வேட்பாளருக்கான பேச்சில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மாகாணசபை தேர்தலில் தமிழ்கட்சியின் தலைவர் தலைமை வேட்பாளராக அறிவிக்கப்படுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்தார். இதற்கான மாற்று ஒருவரை நியமிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுவருகிறது.

முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜாவை (Mavai Senathirajah) ஏற்றுக்கொள்ளாத தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஒரு தரப்பு இதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது.

Contact Us